திரை உலகில் நடிக்கின்ற நடிகர்களின் மகன்கள் வாரிசு நடிகர்களாக மாறி திரை உலகில் கலக்கி வருகின்ற வேளையில் முன்னணி நடிகராக திகழும் விஜயின் மகன் இயக்குனர் துறையை தேர்வு செய்திருக்கிறார்.
அந்த வகையில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் விஜய்யின் மகன் சஞ்சய் லைகா நிறுவனத்தில் படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சம்பளம் தான் தற்போது திரை உலக்கில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக உள்ள நிலையில் அவர் முதல் படத்தை லைகா நிறுவனத்திற்காக தயாரிக்க இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் விஜய்யின் மகன் தனது தாத்தாவைப் போல இயக்குனராக மாற இருக்க கூடிய சூழ்நிலையில் இவர் கனடாவில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை முடித்த பின் சில குறும்படங்களை இயக்கியிருக்கிறார்.இதைத் தொடர்ந்து திரை உலகில் அவரை நடிகராக வேண்டும் என்று விஜய் ஆசைப்பட நடிப்பில் ஆர்வம் இல்லாத சஞ்சய் தனக்கு பிடித்த டைரக்ஷன் துறையை தேர்வு செய்தார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் அவர் இயக்க உள்ள முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்தாண்டு அறிவிப்புகள் வெளி வந்தது.
இதைத் தொடர்ந்து இந்த படத்திற்கான ஹீரோ கிடைக்காமல் விஜய் மகன் திண்டாடி வருவதாக விஷயங்கள் வெளி வந்ததை அடுத்து தற்போது படத்தில் சந்திப் கிஷான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளி வந்து படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைக்கக்கூடிய விஷயமும் வெளிவந்தது.இந்நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கும் என்ற படத்தில் இயக்குனராக பணி புரியும் ஜேசன் சஞ்சய்க்கு அந்த நிறுவனம் 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க முன் வந்துள்ளதாக தெரிகிறது.
இதை அடுத்து முதல் படத்துக்கே 10 கோடி சம்பளம் வழங்கப்படுகின்ற விஷயம் காட்டுதீ போல் பரவி வருவதோடு வழக்கமாக புதுமுக இயக்குனர் என்றால் அவருக்கு கோடிகளில் சம்பளம் வழங்கப்படுவது அபூர்வமாக இருக்கும் ஆனால் ஜேசன் சஞ்சய்க்கு முதல் படத்திலேயே 10 கோடி ஜாக்பாட் அடித்த விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது திரையுலகம் முழுவதும் கடுமையான அதிவலைகளை ஏற்படுத்தியிருப்பதோடு புதுமுக இயக்குனர்கள் ஆச்சரியத்தோடு இந்த விஷயத்தை பேசி வருகிறார்கள்.