கிரிந்திவெல காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெந்தலந்த பிரதேசத்தில் கோழிப்பண்ணை ஒன்றில் பணிபுரிந்த நபர் ஒருவர் நேற்று (03) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கோழிப்பண்ணையை சுத்தம் செய்யும் போது இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 48 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.