ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது ப்ளீடிங் ஐ வைரஸ் (Bleeding eyes virus) தீவிரமாக பரவி வருகின்றது.
இதன் தாக்கம் கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் மிக தீவிரமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ருவாண்டாவில் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில், கென்யா, ருவாண்டா, கொங்கோ, உகாண்டா, பொலிவியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு செல்லும் தங்கள் நாட்டுப் பயணிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ப்ளீடிங் ஐ வைரஸ் எனப்படும் இந்த மார்பர்க் வைரஸ் நோய் மனிதர்களுக்கு ஏற்படும் மிகவும் ஆபத்தான நோய் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.