ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு மீதான விவாதமும் இன்று (4) நடைபெறவுள்ளது.
சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் நேற்று (3) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.