பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை – கிண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
அவர் வைத்தியசாலையில் ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2011ஆம் ஆண்டு வெளியான லத்திகா திரைப்படம் மூலம் அறிமுகமாகியவர் நகைச்சுவை நடிகர் சீனிவாசன்.
இவரது நகைச்சுவை மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் பவர் ஸ்டார் சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார்.
அதன்பிறகு கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற சில படத்தில் நடித்து இரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இதேவேளை அவர் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமில்லாமல் கதாநாயகனாகவும் திரைப்படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.