இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட விரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதன்படி ஒரு ஆண்டில் அதிக ஓட்டங்களை குவித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு மேலும் 282 ரன்கள் தேவையாக உள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதம், 5 அரை சதத்துடன் 1,562 ஓட்டங்களை 78.10 சராசரியுடன் குவித்திருந்தார்.
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ள ஜெய்ஸ்வாலுக்கு தற்போது இந்த சாதனையை தகர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக ஓட்டங்களை குவித்த சாதனை, பாகிஸ்தான் வீரர் முகம்மது யூசப் வசம் உள்ளது.
அவர், 2006ல் 11 போட்டிகள், 19 இன்னிங்சில் 1,788 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார்.