கழுகுகளின் எண்ணிக்கை குறைந்ததால் சுமார் 5 லட்சம் மனித உயிர்கள் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.
மாமிச உண்ணியாக அறியப்படும் கழுகுகள் சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவை வேட்டையாடும் விலங்குகள் பெரும்பாலும் மனிதர்களுக்கு தொந்தரவு தரக்கூடியவை ஆகும்.
உலகம் முழுவதும் ஏராளமான கழுகுகள் இருந்தாலும் அவற்றின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக கழுகுகளில் 23 இனங்கள் உள்ளன.
இவற்றில் 16 வகைகள் ஆசியாவை சேர்ந்தவை.
1990 களில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி உலகம் முழுவதும் சுமார் 5 கோடி கழுகுகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.
இதனால் கழுகுகள் வேட்டையாடக் கூடியதும், மனிதர்கள் மத்தியில் பாக்டீரியா மற்றும் தொற்று நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
இதன் விளைவாக கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக “அமெரிக்கன் எக்கனாமிக் அசோசியேஷன்” என்ற பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
தொற்று நோய்க்கு வழி வகுக்கும் எலி, சில பறவைகள் மற்றும் மனித உயிர்களை கொல்லக்கூடிய பாம்புகள் உள்ளிட்டவற்றை கழுகுகள் வேட்டையாடுகின்றன.
இந்த கழுகினுடைய எண்ணிக்கை குறைவது மக்கள் மத்தியில் தொற்று நோய் அதிகரித்து உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகிறது.
இந்த ஆய்வு தகவலை அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழப்புகளை தவிர்த்து கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட கழுகுகள் எண்ணிக்கை குறைவால் 69 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.