தெலுகு சினிமாவின் முன்னனி ஸ்டார் நடிகர்களில் நாகர்ஜுனாவும் ஒருவர்.
அவரின் மூத்த மகன் நாக சைதன்யா.
இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஷ் படத்தின் மூலம் தெலுகு திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் ஆவார்.
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் 4 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில் திடீரென கருத்து வேறுபாடுகள் காரணமான விவாகரத்து பெற்றனர்.
தற்போது நாக சைதன்யா பாலிவுட் பிரபலம் சோபிதாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இருவரின் திருமணம் இன்று ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் கோலாகலமாக நடைபெற்றது.
இன்னும் அதுகுறித்த எந்த புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியில் வரவில்லை.