இந்தியாவுக்கு எதிராக எதிர்வரும் 6ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமாகும் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.
இரு அணிகளுக்கிடையில் கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்த முதல் டெஸ்டில் 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
மேலும் அடுத்த போட்டிகளுக்கு தயாராவதற்காக ஓய்வு தேவைப்படுவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இவரின் உபாதை அவுஸ்திரேலிய அணிக்கு பாரிய இழப்பாக கருதப்படுகிறது.