தானும் தன் மனைவி மேகனும் விவாகரத்து செய்து பிரிய இருப்பதாக தொடர்ந்து பரவிவரும் வதந்திகள் தொடர்பில் இளவரசர் ஹரி முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஹரியும் மேகனும் தனித்தனியே வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் நிலையில், இருவரும் விவாகரத்து செய்து பிரிய இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்தநிலையில், விவாகரத்து குறித்த வதந்திகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார் இளவரசர் ஹரி.
சமூக ஊடகங்களில் பரவிவரும் வதந்திகளின்படி நாங்கள் இருவரும் ஒரு 10 அல்லது 12 முறை விவாகரத்து செய்திருப்போம், வீடு மாற்றியிருப்போம் இல்லையா என வேடிக்கையாக சிரித்தவண்ணம் கேட்ட ஹரி, தாங்கள் இருவரும் சேர்ந்து பொதுநிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்ளாததால் இப்படிப்பட்ட வதந்திகள் பரவுவதாக தெரிவித்தார்.