தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple) தனது ஊழியர்களின் சாதனங்கள் மற்றும் iCloud கணக்குகள் மூலம் சட்டவிரோதமாக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் டிஜிட்டல் விளம்பரத் துறையில் பணிபுரியும் ஊழியர் அமர் பக்த் இது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (2) கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மீது வழக்கைத் தாக்கல் செய்தார்.
வேலையின் நிபந்தனையாக ஊழியர்கள் தனியுரிமைக்கான உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஆப்பிள் கோருகிறது என்று அவர் கூறினார்.
ஆப்பிள் ஊழியர்கள் தங்கள் வீட்டில் இருக்கும்போது physical, வீடியோ மற்றும் மின்னணு கண்காணிப்பை நடத்தக்கூடிய ஒரு கொள்கைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் வழக்கு குற்றம் சாட்டுகிறது.