தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மக்களுக்கு பலரும் தற்போது உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
நடிகர் விஜய் அவரது அலுவலகத்துக்கு மக்களை வர வைத்து புயல் நிவாரணம் கொடுத்தது கடும் விமர்சனத்தை சந்தித்து வருகின்றது.
இந்தநிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் 10 இலட்சம் ரூபாய் பணத்தை புயல் நிவாரணத்திற்காக வழங்கியுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் இதனை வழங்கியுள்ளார்.