பருத்தித்துறை – திருமாள்புரம் பகுதியில், கிணற்றில் தவறி வீழ்ந்த மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இன்று நண்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிணற்றில் வீழ்ந்த பலூனை எடுக்க முற்பட்ட போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிணற்றில் வீழ்ந்த நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குழந்தை உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.