கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள 9 மாடிகளைக் கொண்ட விருந்தகமொன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
9 மாடிகளைக் கொண்ட விருந்தகத்தின் 7 வது மாடியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டது.
குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகத் தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விருந்தகத்திற்குள் சிக்கியிருந்த வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.