மிட்செல் ஸ்டார்க் சாதனை
இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க் ஆறு விக்கெட்கள் வீழ்த்தி அவரது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை பதிவு செய்தார்
அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது.
அந்த அணியின் முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார்.
அவர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் இந்திய அணியின் இளம் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் “எல் பி டபிள்யூ” முறையில் ஆட்டமிழந்தார்.
டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்தில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்தார் மிட்செல் ஸ்டார்க்.
முன்னதாக மேற்கு இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பெட்ரோ கோலின்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் மூன்று முறை முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
அந்த சாதனையை மிட்செல் ஸ்டார்க் சமன் செய்து முதல் இடத்தை அவருடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுக்கும் அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் மிட்செல் ஸ்டார்க் செய்து இருக்கிறார்.
இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்தியதன் மூலம் பகல் – இரவு போட்டிகளில் நான்காவது முறையாக ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்களுக்கும் அதிகமாக வீழ்த்திய சாதனையை செய்தார்.
வேறு எந்த பந்துவீச்சாளரும் பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறைக்கும் அதிகமாக ஒரே இன்னிங்ஸில் ஐந்து அல்லது அதற்கும் விக்கெட்களை வீழ்த்தியதில்லை.
இந்தப் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் முதன்முறையாக இந்திய அணிக்கு எதிராக தனது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை பதிவு செய்தார்.
இதுவே மிட்செல் ஸ்டார்க்கின் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு ஆகும்.
சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருக்கிறார் மிட்செல் ஸ்டார்க்.
2016 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 50 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியதே இதுவரை அவரது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாக இருந்தது.
இந்த நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணிக்கு எதிராக 48 ஓட்டங்களைக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி தனது முந்தைய சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை முறியடித்தார்.