மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டிய காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டிய சந்தியில் அவர் செலுத்திய டிபென்டர் ரக வாகனம் எதிர்த்திசையில் பயணித்த மகிழுந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பில் இன்று (07) நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.