இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
இதன்படி போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் பெத்தும் நிசங்க 89 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 358 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தநிலையில் தென்னாப்பிரிக்க அணி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.