நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, காலி, களுத்துறை, அம்பாறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில், சுமார் 10,000 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையில் வருடாந்தம் 120 முதல் 200 பேர் வரை எலிக்காய்ச்சலால் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.