பிரித்தானியாவில் காலாவதியான பயண ஆவணங்களை சர்வதேச பயணங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் கால அவகாசத்தை மார்ச் 2025 வரை நீட்டிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பிரித்தானிய அரசு இலத்திரனியல் கடவுசீட்டு முறைக்கு மாறிவரும் நிலையில் இதில் ஏற்படும் தாமதம் காரணமாக குறித்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முழுமையான இலத்திரனியல் கடவுச்சீட்டு முறைக்கு (fully online eVisa system) மாறும் போது அவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரித்தானியாவில் 2024 டிசம்பர் மாத இறுதிக்குள் பயோமெட்ரிக் ரெசிடென்ஸ் பர்மிட் (BRP), விசா வின்யெட் ஸ்டிக்கர் மற்றும் பயோமெட்ரிக் ரெசிடென்ஸ் கார்டு (BRC) போன்ற ஆவணங்களை இலத்திரனியல் கடவுசீட்டாக மாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை 3.1 மில்லியனிற்கும் மேற்பட்டோர் இலத்திரனியல் கடவுசீட்டு மாற்றத்தை முடித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இன்னும் பலர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த நேரக்கெடுவை பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பதுடன் இதனை எளிதாக்க அரசு உறுதியுடன் செயல்படுவதாக குடியேற்ற மற்றும் குடியுரிமை விவகார அமைச்சர் சீமா மால்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.