சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிவரும் தென்னாபிரிக்க அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அதற்கமைய, இலங்கை அணியை விடவும், 221 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி முன்னிலையில் உள்ளது.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றது.
அத்துடன், இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.