சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத், நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிரிய கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸுக்கு நுழைந்ததையடுத்து, ஜனாதிபதி, நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக, கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அவர்களின் தாக்குதல்களையடுத்து, சிரிய இராணுவம் பின்வாங்கியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.