Wednesday, December 25, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsTechnologyமனிதர்களை குளிப்பாட்டும் இயந்திரம் : ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு..!

மனிதர்களை குளிப்பாட்டும் இயந்திரம் : ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு..!

ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிக வேலைப்பளு அல்லது சோர்வினால் குளிக்க தாமதமாகும் நேரத்தில், ஜப்பானின் புதிய Human Washing Machine ஒரே தீர்வாக அமையலாம்.

இந்த இயந்திரம் ஆடைகளை போலவே மனிதர்களையும் 15 நிமிடத்தில் குளிப்பாட்டி உலர்த்திவிடும்.

ஜப்பானின் Science Co. நிறுவனம் உருவாக்கிய இந்த வினோத சாதனம், குளிக்க நேரமில்லாதவர்களுக்கு பெரும் சுலபமாக இருக்கும்.

இதில் ஒருவர் உட்கார்ந்தவுடன், செயற்கை நுண்ணறிவு (AI) அவர்களின் தோல் மற்றும் உடலின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தண்ணீரின் வெப்பநிலையும், சுத்தப்படுத்தும் முறைகளையும் சரிசெய்யும்.

1970-ஆம் ஆண்டில் ஜப்பானின் World Sanyo Electric Co. நிறுவனம் (தற்போது Panansonic என பிரபலமாக அறியப்படுகிறது) உருவாக்கிய பழைய வடிவமைப்பின் மேம்பட்ட பதிப்பாக இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய வடிவமைப்பில் அதிக எண்ணிக்கையிலான மசாஜ் பந்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த சாதனம் Osaka Kansai Expo-வில் 1,000 விருந்தினர்களால் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

அதன் பிறகு, இது வணிக உற்பத்திக்காக தயாராகும் என்று Science Co. நிறுவனத்தின் தலைவர் Aoyama தெரிவித்தார்.

இயந்திரம் எப்படி செயல்படுகிறது என்றால், ஒருவரை போர்விமான காக்பிட் போல தோற்றமுள்ள பிளாஸ்டிக் அறைக்குள் அமர வைத்து, வெந்நீர் நிரப்பப்படுகிறது. அதிலிருந்து வெளிவரும் வேகமான தண்ணீர் ஜெட், மசாஜ் அனுபவத்துடன் நரம்புகளை தளர்வூட்டும்.

இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு முக்கிய சாதனமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments