19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
குறித்த போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தநிலையில் 199 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 35.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இதற்கமைய பங்களாதேஷ் அணி வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.