Tuesday, December 24, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
Homeவிளையாட்டுஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா

இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட அவுஸ்திரேலியா சென்றுள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய பெண்கள் அணி வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 371 ஓட்டங்களை குவித்தது.

அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 105 ரன்களும் ஜார்ஜியா வோல் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்திய அணி தரப்பில் சைமா தாக்கூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 372 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 44.5 ஓவர்களில் 249 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.

அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 54 ரன்கள் அடித்தார்.

அவுஸ்திரேலியா அணி தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ஆம் திகதி பெர்த்தில் நடைபெறுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments