டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை தொடர் தோல்விகளை சந்தித்த இந்திய அணித்தலைவர் என்ற மோசமான பட்டியலில் ரோஹித் சர்மா இடம்பிடித்துள்ளார்.
குறித்த பட்டியலில் 1967 மற்றும் 1968ஆம் ஆண்டுகளின் இந்திய அணியின் தலைவராக செயற்பட்ட மேக் படவுடி தொடர்ந்து 6 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதனையடுத்து 1999 ஆம் ஆண்டில் தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி சச்சின் டெண்டுல்கர் இப்பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தநிலையில் தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி தத்தா கெய்க்வாட் (1959), எம்.எஸ்.தோனி (2011) (2014), விராட் கோலி (2020-21) ஆகியோரை சமன் செய்து ரோகித் சர்மா (2024) பட்டியலில் 3-ம் இடத்தை பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.