யாழ்ப்பாணம் டெல்ப் தீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 126 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படை வசபா நிறுவனத்திற்கு சொந்தமான கரையோர ரோந்து கப்பல்கள் நேற்று (07) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நாற்பத்து நான்கு (44) பொலித்தீன் பொதிகள் மிதப்பதை அவதானித்து அவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் இருந்த 126 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், கஞ்சா கையிருப்பை தரையிறக்கும் போது கடற்படை நடவடிக்கை காரணமாக கைவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த கஞ்சா கையிருப்பின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபாவாக இருக்கும் என கடற்படை தெரிவித்துள்ளது.