Monday, December 23, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsAmericaகின்னஸ் சாதனையில் இடம்பிடித்த உலகின் மூத்த புதுமண தம்பதி

கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த உலகின் மூத்த புதுமண தம்பதி

சமீபத்தில் அமெரிக்காவில் 100 வயது ஆணும், 102 வயது பெண்ணும் திருமணம் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தனர்.

பெர்னி லிட்மேன்- மார்ஜோரி பிடர்மேன் என்ற இந்த தம்பதியினர் தற்போது 202 வயது மற்றும் 271 நாட்களுடன் பிலடெல்பியாவில் உள்ள அவர்களது வீட்டில் கடந்த 3ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடி 9 ஆண்டுகளாக உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் தங்கள் இளமை பருவத்தில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்துள்ளனர்.

பின்னர் இருவரும் குடும்பத்தோடு தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இவர்களின் துணை இறந்த பிறகு பென்சில்வேனியாவுக்கு குடிபெயர்ந்தனர்.

அங்கு முதியோர் இல்லத்தில் எதேச்சையாக சந்தித்த பிறகு இருவரும் நெருக்கமாகினர்.

பெர்னி என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மார்ஜோரி ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இருவரும் மீண்டும் சந்தித்த போது காதல் மலர்ந்துள்ளது.

இதையறிந்த குடும்பத்தினர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து பெர்னியின் பேத்தி சாரா சிசர்மென் கூறுகையில், இருவரின் நகைச்சுவை உணர்வும், புத்திசாலித்தனமும் தான் அவர்களின் பிணைப்பின் அடித்தளமாக இருந்தது என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments