டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5 இலட்சம் அதாவது அரை மில்லியன் ரன்களை குவித்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து கிரிக்கெட் அணி பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதில் நேற்று (08) நிறைவடைந்த 2வது டெஸ்ட் போட்டியில் தங்களது 1,082-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி, 5 இலட்சம் ரன்களை குவித்த ஒரே அணி என்ற உலக சாதனையை படைத்தது. இதற்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியா, இந்தியா அணிகள் உள்ளன.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த அணிகள்
5,00,126 ரன்கள் – இங்கிலாந்து (1082 போட்டிகள், 18,954 இன்னிங்ஸ்)
4,29,000 ரன்கள் – அவுஸ்திரேலியா (868 போட்டிகள், 15,183 இன்னிங்ஸ்)
2,78,751 ரன்கள் – இந்தியா (586 போட்டிகள், 10,119 இன்னிங்ஸ்)