அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதுண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
யாசகத்தில் ஈடுபட்டு வந்த 70 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த ஜீப் வண்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது சாரதி ஆகியோர் நேற்று பிற்பகல் கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, போலவத்த சந்தியில் வைத்துப் பெண் ஒருவர் ஜீப் வண்டியின் மீது மோதுண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த யாசக பெண் வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது.