இலங்கை கடற்படை இன்று 74 ஆவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகிறது.
இதன் காரணமாக அந்த படையில் சேவையாற்றும் சிரேஷ்ட மற்றும் கனிஸ்ட சேவையாளர்கள் அடங்கலாக 2,138 பேருக்குப் பதவி உயர்வு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரைக்கமைய இந்த பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.