Monday, December 23, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsUKபிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை!

பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை!

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸுக்கு முன் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் வாரத்திற்கு முன்பாக, தொடர்ச்சியாக 114 மணிநேரம், அதாவது 5 நாட்கள் குளிர்கால புயல் ஏற்படும் என்று புதிய வானிலை வரைபடங்கள் எச்சரிக்கின்றன.

டிசம்பர் 20-ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குப் பிறகு, ஸ்காட்லாந்து மற்றும் வடஇங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கும் என வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் WXCharts தெரிவித்துள்ளது.

கிழக்கு நோக்கி NewCastle நகரத்தை மையமாகக் கொண்டு பனிப் புயல் கிறிஸ்துமஸ் வாரம் முழுவதும் தொடரும் எனக் கூறப்படுகிறது.

மற்ற பகுதிகளில், குறிப்பாக லண்டன் மற்றும் Plymouth போன்ற தெற்குப் பகுதிகளில், மணிக்கு 3 மிமீ வரை கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 21-ஆம் திகதி சனிக்கிழமை மதியத்திற்கு முன், ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில், குறிப்பாக Northern Highlands மற்றும் Fort William-ல், பனியின் ஆழம் 20 செ.மீ வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Midlands and around Bradford, Leeds மற்றும் York போன்ற இடங்களில் லேசான பனிப் பொழிவு தொடரும் என கூறப்படுகிறது.

டிசம்பர் 24-ஆம் திகதி, வடகிழக்கு கடற்கரைப் பகுதிகள், குறிப்பாக Newcastle, Durham மற்றும் Middlesbrough ஆகிய இடங்களில் 1.5 செ.மீ வரை பனி படியும் என்றும்,

Wales-ல் குறிப்பாக Snowdonia சுற்றியுள்ள வடக்கு பகுதியில் அதே நாளில் பனிப்பொழிவு தொடங்கும் என்றும், வேல்ஸின் கடற்கரைகளின் கனமழையுடன் -2°C வரை குளிர் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிரின் தாக்கம்
டிசம்பர் 25-ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினம் வரை பனிப் பொழிவு தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் -7°C வரை அதிக குளிரைக் கண்டிடலாம்.

மிட்லாண்ட்ஸ் பகுதியில் -3°C மற்றும் தெற்குப் பகுதிகளில் 2°C முதல் 5°C வரை குளிர் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலநிலையால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments