பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், நாட்ரிடாம் தேவாலய மறுதிறப்பு விழாவுக்காக சென்றிருந்த இளவரசர் வில்லியமும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்கள்.
இந்நிலையில், ட்ரம்பும் வில்லியமும் சந்தித்துப் பேசிய விடயம், ஹரி மேகன் தம்பதியருக்கு பதற்றத்தை உருவாக்கியிருக்கக்கூடும் என ராஜ குடும்ப விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாரீஸில் இளவரசர் வில்லியமை சந்தித்ததைத் தொடர்ந்து, சிலர் நேரில் பார்க்க கூடுதல் அழகுடன் இருப்பார்கள் இல்லையா? வில்லியமும் அப்படித்தான் இருந்தார், அதை அவரிடமே சொல்லிவிட்டேன் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
மேலும், வில்லியமிடம், இளவரசி கேட் மற்றும் மன்னர் சார்லசின் புற்றுநோய் குறித்து ட்ரம்ப் விசாரித்துள்ளார்.
இந்நிலையில், இப்படி வில்லியமும் ட்ரம்பும் சந்தித்துப் பேசிக்கொண்ட விடயம், ஹரி மேகன் தம்பதியருக்கு பதற்றத்தை உருவாக்கியிருக்கலாம் என்கிறார் ராஜ குடும்ப விமர்சகரான Richard Fitzwilliams.
தான் அமெரிக்க ஜனாதிபதியானால், ஹரியைக் காப்பாற்றமாட்டேன் என ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், ஹரி நாடுகடத்தப்படக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.
தனது ஸ்பேர் புத்தகத்தில், தான் பலவித போதைப்பொருட்களை சோதித்துப் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார் ஹரி.
ஆனால், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கும் பட்சத்தில், அவருக்கு அமெரிக்காவில் வாழ விசா கொடுக்கப்பட்டிருக்கமுடியாது.
ஆக, அவர் விசா விண்ணப்பத்தில் தனது போதைப்பொருள் பயன்பாடு குறித்து பொய் சொன்னாரா என The Heritage Foundation என்னும் அமைப்பு கேள்வி எழுப்பிய விடயம் நீதிமன்றம் வரை சென்றது.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் தங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்னும் அச்சம் ஹரி மேகன் தம்பதியருக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் ட்ரம்பும் வில்லியமும் சந்தித்துப்பேசியுள்ளதால், ஹரி மேகன் தம்பதியர் பதற்றம் அடைந்திருக்கலாம் என்கிறார் ராஜ குடும்ப விமர்சகரான Richard Fitzwilliams.
என்றாலும், ட்ரம்பைப் பொருத்தவரை, அவரும் வில்லியமும் பேசிய விடயங்களில் ஹரி குறித்த பேச்சு எழுந்திருக்காது, ஏனென்றால், ட்ரம்புக்கு அது முக்கியமான விடயமாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார் அவர்.