Wednesday, December 25, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsSri Lankaஇலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும் - ஜனாதிபதி

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும் – ஜனாதிபதி

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரச கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது.

ஊழலை ஒழிப்பதற்காகவே இந்த மக்களாணை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கையூட்டல் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு போதுமான சட்டங்களும் நிறுவனங்களும் இருந்த போதிலும் அவற்றைத் தடுப்பதற்காக இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை மனசாட்சியிடமே கேட்க வேண்டும்.

கையூட்டல் மற்றும் ஊழல் என்பன சமூக அவலமாக மாறியுள்ளன.

2021ஆம் ஆண்டில் கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழு 69 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதுடன் 40 வழக்குகள் மீளப் பெறப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டில் 89 வழக்குகளைத் தாக்கல் செய்த அந்த ஆணைக்குழு 45 வழக்குகளை மீளப் பெற்றுள்ளது.

இந்த வழக்குகள் மீளப் பெறப்பட்டமைக்கான காரணத்தை ஆணைக்குழு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாகாதது ஏன்? என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.

அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன.

பெரிய விலங்குகள் சிலந்தி வலையைச் சேதமாக்கித் தப்பிச் செல்கின்றன.

எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரச கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்.

சட்டத்தை அமுல்படுத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

நீதியை நிலைநாட்டுவதைத் தாமதப்படுத்துவது நீதியை நிலைநாட்டுவதாக அமையாது.

எனவே கையூட்டல் மற்றும் ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments