போர்டர்-கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது களத்தில் நடந்த சம்பவத்திற்காக இந்திய வீரர் மொஹமட் சிராஜ் மற்றும் அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மொழி, செயல்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்தி இழிவுபடுத்தும் அல்லது ஆக்ரோஷமான எதிர்வினையை மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டில் மொஹமட் சிராஜுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,
அதேநேரம், சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர், வீரர் ஆதரவு பணியாளர்கள், போட்டி நடுவர் அல்லது மத்தியஸ்தருக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டில் ட்ராவிஸ் ஹெட்டுக்கும் போட்டிக்கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மொஹமட் சிராஜ் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோருக்கு தலா ஒரு குறைபாட்டுப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இரு வீரர்களும் தத்தமது குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன், போட்டி மத்தியஸ்த்தர் ரஞ்சன் மடுகல்லே முன்மொழிந்த அபராதங்களையும் ஏற்றுக் கொண்டனர்.