சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் உட்பட நாடு முழுவதும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு இராணுவ இலக்குகள் மீது 100 இற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் ஆயுத உற்பத்தி தொடர்பான ஆய்வு மையமொன்றும் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.