புதிய மதுவரி ஆணையாளராகச் சிறப்புத் தர அதிகாரி யு.எல். உதய குமார பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அவர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளராக பணியாற்றியவர்.
மதுவரி ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய யு. டி. என். ஜயவீர, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு யு.எல். உதய குமார பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.