தாய்லாந்தில் மசாஜ் செய்து கொண்ட தாய்லாந்தின் இளம் பாடகி உயிரிழந்துள்ளார்.
20 வயதே ஆன பாடகி சாயதா, கழுத்து மற்றும் தோள்பட்டையில் ஏற்பட்ட வலியை சரிசெய்வதற்காக மசாஜ் செய்து கொண்டுள்ளார்.
முதல் முறை மசாஜ் முடித்துக்கொண்டு வீடு சென்ற அவருக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை.
இதனை தொடர்ந்து 2-வது முறையாக மசாஜ் செய்ய சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு கழுத்தை முறுக்கும் மசாஜ் செய்யப்பட்டது.
இதனால் சில நாட்களில் அவருக்கு முதுகு மற்றும் வயிற்றில் அதிகமான வலி ஏற்பட்டுள்ளது.
இது மசாஜால் ஏற்பட்ட வலி என நினைத்து மீண்டும் மசாஜ் செய்து கொண்டுள்ளார்.
முதல் இரண்டு முறை இருந்த பணியாளர் இல்லாமல் 3-வது முறை புதிய பணியாளர் மசாஜ் செய்தார்.
அவர் கடுமையான முறையில் செய்தார்.
இதனால் அவருக்கு கழுத்தில் வீக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவர் கடைசியாக பேசி வெளியிட்ட வீடியோவில் இந்த மசாஜ் தொடர்பான விவரங்களை தெரிவித்துள்ளார்.