Friday, May 2, 2025
HomeMain NewsMiddle Eastபீதியை கிளப்பும் பாபா வங்காவின் கணிப்பு!

பீதியை கிளப்பும் பாபா வங்காவின் கணிப்பு!

சிரியாவில் அதிபா் பஷர் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் ரஷ்யா உதவியுடன் கடந்த 2011 ஆம் ஆண்டு டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள் மற்றும் அனைத்தும் மாகாணங்களையும் கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இதனை தொடர்ந்து சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.

இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுவான ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளது.

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்கள்.

அலெப்போ, ஹமா, ஹோம்ஸ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றியுள்ளனர்.

டமாஸ்கஸ் நகரையும் சுற்றி வளைத்துள்ள கிளர்ச்சியாளர்கள், தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் தனிவிமானம் மூலம் ரகசிய இடத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சிரியா மீது இஸ்ரேல் ராணுவமும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கைகளில் பயங்கர ஆயுதங்கள் இருப்பதால் தற்காப்புக்காக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் தொற்றியுள்ளது.

இந்நிலையில் பாபா வங்காவின் கணிப்புகள் பலித்து விடுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பால்கனின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, மூன்றாம் உலகப் போர் குறித்து கணித்திருப்பது தற்போதைய நிகழ்வுகளுடன் ஒத்துப்போகிறது. அதாவது பாபா வங்கா, சிரியா வீழ்ச்சியடையும் போது மேற்கு மற்றும் கிழக்கிற்கு இடையே போர் மூளும் என கணித்துள்ளார்.

வசந்த காலத்தில் கிழக்கில் ஒரு மோதல் வெடிக்கும் என்றும் இதன் காரணமாக மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் மூளும் என்றும் கணித்துள்ளார்.

இந்த போரால் மேற்கத்திய நாடுகள் பேரழிவை சந்திக்கும் என்றும் இதனால் மனித குலமும் அழிவை சந்திக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

இந்நிலையில் தற்போதைய போர் சூழல்கள் பாபா வங்காவின் கணிப்புகளை நிஜமாக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments