பிரித்தானியாவில் முறைப் பெண்ணை திருமணம் செய்யத் தடை விதிக்கும் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
பிரித்தானியாவில் First Cousins அதாவது சொந்த அத்தை அல்லது மாமன் மகளையோ/மகனையோ திருமணம் செய்ய தடை விதிக்க ஒரு புதிய சட்டம் முன்மொழியப்படவுள்ளது.
இன்னும் விரிவாக சொல்லவேண்டுமானால், ஒரே பாட்டி அல்லது பாட்டனாரை சொந்தம் கொண்டாடும் இருவர் திருமணம் செய்யக்கூடாது.
பழமைவாத கட்சியைச் சேர்ந்த எம்.பி. ரிச்சர்ட் ஹோல்டன் (Richard Holden) இதற்கு முன்னணி வகிக்கின்றார்.
தற்போதைய திருமண சட்டம் (Marriage Act 1949) தகாத உறவுகளான சகோதரர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் ஆகியோரை திருமணம் செய்துகொள்ள மட்டுமே தடை விதிக்கின்றது.
இவர்களுக்கு இடையில் திருமணம் நடந்தால் ஏற்படும் உடல் மற்றும் சமூக ரீதியான சிக்கல்களை முன்வைத்து, ஹோல்டன் புதிய சட்டத்தை வழங்க திட்டமிட்டுள்ளார்.
First Cousins இடையில் நடக்கும் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புக் குறைபாடுகள் நேரிடும் ஆபத்து இருமடங்காக அதிகரிக்கும் என்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.