Tuesday, December 24, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsMiddle Eastஊழல் வழக்குகளில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர் - நீதிமன்றத்தில் முன்னிலை!

ஊழல் வழக்குகளில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர் – நீதிமன்றத்தில் முன்னிலை!

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு [75 வயது] கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஊழல் வழக்கில் சிக்கி அல்லோலப்பட்டு வருகிறார்.

முதல் முறையாக தன் மீதனாக குற்றச்சாட்டுக்களுக்கு நெதன்யாகு நீதிமன்றத்தில் தோன்றி வாக்குமூலம் அளித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த அவர், நாட்டின் நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் ஆவார்.

குற்ற வழக்கில் சிக்கிய இஸ்ரேலின் முதல் பதவியில் இருக்கும் பிரதமரும் இவரே.

கோடீஸ்வர நண்பர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளை லஞ்சமாக பெற்றது, மோசடி, நம்பிக்கை மீறல், தனக்கு சாதகமான செய்தி வெளியிட்டால் ஊடகங்கள் மீதான ஒழுங்குமுறையைத் தளர்த்துவதாக ஊடக அதிபர்களுக்கு அழுத்தம் கொடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகக்ளை உள்ளடக்கிய மூன்று வழக்குகள் நேதன்யாகு மீது உள்ளன.

2019 இல் எழுந்த இந்த குற்றச்சாட்டுகளின் மீது 2020 முதல் நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது. மேலும் இடையில் கடந்த 2023 அக்டோபர் 7 தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்திய சமயத்தை பயன்படுத்தி நேதன்யாகு சட்டத்துறையின் அதிகாரத்தை குறைக்க முயன்றதாக சர்ச்சை எழுந்ததது.

இந்நிலையில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைக்காக முதல் முறையாக நேற்று டெல் அவிவ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இஸ்ரேலில் ஜனநாயகத்திற்கு உண்மையான அச்சுறுத்தல் சட்ட அமலாக்க அதிகாரிகளில் சிலரால் தான்.

இவர்கள் மக்களின் விருப்பத்தை ஏற்க மறுத்து, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் விசாரணைகள் மூலம் சதி செய்ய முயற்சிக்கின்றனர் என்று கடந்த வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டார் நேதன்யாகு.

தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் தோன்றி தன் மீதான குற்றசாட்டுகள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்தார்.

 

மேலும் 7 முனை போரை நடத்திபடியே தன்னால் இந்த விவகாரத்தையும் கையாள முடியும் என தெரிவித்து ஊடகத்தினர் இதை பெரிதுபடுத்துவதை சாடினார்.

காசாவில் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 44,500 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அவருக்கும் அவரது முன்னாள் பாதுகாப்புத் தலைவர் யோவ் கேலண்டையும் போர்க் குற்றவாளிகளாக அறிவித்து கைது வாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments