கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பம்பஹின் சந்தியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களினால் கையில் தீ பந்தம் ஏந்தி நேற்றிரவு ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் கல்வி தொடர்பான விடயங்களில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள், அத்தியாவசிய வசதிகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பம்பஹின் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தங்களது அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்தி தருமாறும் இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி அம்பாறை – ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் முன்றலில் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.