கண்டி பல்லேகலயில் நடைபெற்ற லங்கா டி10 சுப்பர் லீக் தொடரில் பணத்துக்காக ஆட்ட நிர்ணயம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ‘கோல் மார்வெல்ஸ்’ அணியின் உரிமையாளரான இந்தியரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.
லங்கா டி10 சுப்பர் லீக் போட்டியில் கலந்து கொண்ட வீரர் ஒருவரை ஆட்ட நிர்ணயத்திற்காக அணுகிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.