வெனிசுவேலா (Venezuela) அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 103 பேர் இந்த வாரம் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெனிசுவேலாவின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த ஜூலை மாதம் நடாத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஜனாதிபதித் தேர்தலின் வாக்குப் பதிவுகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தப் போராட்டங்களின் போது சுமார் 2,000 பேர் கைது செய்யப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.