டொயோட்டாவின் (Toyota) முதல் எலெக்ட்ரிக் கார் Urban Cruiser EV என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை முழுமையாக சார்ஜ் செய்தால் 550 கிமீ தூரம் வரை பயணிக்கும்.
இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் production version-ஐ நிறுவனம் இன்று (டிசம்பர் 12) உலக சந்தையில் வெளியிட்டுள்ளது.
இதன் concept version கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
Toyota இந்த மின்சார SUVயை 2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பிரித்தானியாவில் (UK) அறிமுகப்படுத்தும்.
அதன்பிறகு, 2025 இறுதிக்குள் இந்தியாவுக்கு வரலாம். இதன் விலை ரூ.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது MG ZS EV, Tata Curve EV மற்றும் வரவிருக்கும் Hyundai Creta EV போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
Toyota Urban Cruiser ஆனது Heartect-E இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது, இது Maruti Suzuki நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கார் Maruti Suzuki EVX இன் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாகும், இதன் உற்பத்தி பதிப்பு இத்தாலியின் மிலனில் நடந்த மோட்டார் ஷோ EICMA-2024 இல் e-Vitara என்ற பெயரில் உலகளாவிய சந்தைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.