அவுஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி அவுஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. 13.2 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 100-வது சர்வதேச போட்டியில் விராட் கோலி விளையாடி சாதனை படைத்துள்ளார்.
அதாவது டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 100* சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதன் வாயிலாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 100 போட்டிகளில் விளையாடிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
முதல் வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 110 போட்டிகளில் விளையாடி அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.