ஹரியானா – பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த தாக்குதலில் 10 விவசாயிகள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த பட்ச விலைக்கு பசளை மற்றும் விவசாயிகளுக்கான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8ஆம் திகதியிலிருந்து விவசாயிகளினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.