அடுத்த வருடம் 30 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடம் 20 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு பிரவேசித்துள்ளதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இந்த மாதத்தின் கடந்த 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 68 ஆயிரத்து 648 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன் கடந்த 11 ஆம் திகதி மாத்திரம் 9,847 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.