அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு அவதூறு ஏற்படுத்தியமைக்காக சர்வதேச ஊடக நிறுவனமொன்று, அவருக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலரை நட்டஈடாக வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த மார்ச் 10 ஆம் திகதி நேர்காணல் ஒன்றின்போது, குறித்த ஊடக நிறுவனத்தில் நெறியாளர், டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டார்.
எவ்வாறாயினும், டொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு, தொடர்பில் நியூயோர் நீதிமன்றம், தீர்ப்பை அறிவித்தது.
அதில் அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கத் தவறியதாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்ப் மீதான அவதூறு தொடர்பில் குறித்த நெறியாளர் வருத்தம் தெரிவித்த அதேவேளை தொடர்புடைய ஊடக நிறுவனம் நட்டஈடு வழங்குவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளது.