இந்திய அணிக்கெதிராக அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.
முன்னதாக 14 சதங்களை விளாசி ரிக்கி போண்டிங் குறித்த சாதனையைத் தன்வசம் வைத்திருந்தார்.
இந்தநிலையில் இந்த சாதனையை ஸ்டீவ் ஸ்மித் தகர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.