பிரான்ஸின் மயோட்டே (Mayotte) பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மயோட்டே பகுதியில் கடந்த சில நாட்களாகச் சீரற்ற காலநிலை நிலவுகின்றது.
குறித்த பகுதியில் தற்போது, மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் சீரற்ற காலநிலையால் மீட்புப் பணிகளைத் தொடர முடியாததுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
குறித்த புயல் மணித்தியாலத்துக்கு 225 கிலோமீற்றர் வேகத்தில் வீசியுள்ளது.
இதனையடுத்து, மயோட்டின், பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் உணவு, நீர் மற்றும் தங்குமிடங்களுக்காகப் போராடி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.